கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடப்பதுண்டு, ஆனால் இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுண்டி லீக் தொடரில், பென்கிரிட்ஜ் கிரிக்கெட் கிளப் மற்றும் பெல்சால் கிரிக்கெட் கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இதில் பென்கிரிட்ஜ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மைல்ஸ் டேவிஸ், யாரும் எதிர்பாராத வகையில் ஒரே ஓவரில் அடுத்தடுத்த 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
Six wickets in six balls! 😮
Penkridge CC bowler Myles Davis took a double hat-trick on Saturday.
Wickets 3, 5 and 6 were caught on camera! pic.twitter.com/5OsYDcT2Rd
— Test Match Special (@bbctms) April 28, 2026
169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த பெல்சால் அணி, 49 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது.
அப்போது பந்துவீச வந்த டேவிஸ், தனது மாயாஜால பந்துவீச்சால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதலில் ஒரு ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அடுத்த ஓவரின் முதல் நான்கு பந்துகளிலும் விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் 49/2 என்றிருந்த எதிரணியின் ஸ்கோர், சில நிமிடங்களிலேயே 49/9 என நிலைகுலைந்தது.
