டெல்லி மெட்ரோ ரயில்களில் நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது மெட்ரோவில் பயணித்த இளைஞர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மெட்ரோ ரயிலில் அமர்ந்து பயணித்த அந்த இளைஞர், அருகில் நின்றிருந்த பெண்ணுக்கு இருக்கையை விட்டுக் கொடுக்க மறுத்ததாகக் கூறி, அப்பெண் அவரைத் திட்டிய காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.

வைரலாகும் அந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞரிடம், “நீங்கள் ஏன் இருக்கையை விட்டு எழுந்து எனக்கு இடம் தர மறுக்கிறீர்கள்?” என்று அப்பெண் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த இளைஞர், “நான் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்கிறேன், எனக்கு உட்கார உரிமை உள்ளது” எனப் பதிலளிக்கிறார்.

இதனால் கோபமடைந்த அந்தப் பெண், பொது இடங்களில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது நாகரிகம் என்றும் குரலை உயர்த்திப் பேசுகிறார். இந்த வாக்குவாதத்தின்போது, அருகில் இருந்த மற்ற பயணிகளும் இருதரப்பு நியாயங்களையும் முன்வைத்து விவாதிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது இணையத்தில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு தரப்பினர், “பொது இடங்களில் பெண்களுக்கு மரியாதை அளிப்பது அவசியம்” என்று பெண்ணுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பினர், “டிக்கெட் எடுத்து அமர்ந்திருப்பவரை எழச் சொல்வது தவறு, அது அவரின் விருப்பம்” என்று இளைஞருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர்.

“>

 

மெட்ரோ ரயில் நிர்வாகம், இருக்கை ஒதுக்கீடுகள் குறித்துப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. பொது இடங்களில் இத்தகைய மோதல்கள் நடப்பது டெல்லி மெட்ரோ பயணிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.