உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் பெரிய கட்டாரியுடன் பள்ளிக்குள் நுழைந்த சம்பவம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷிகா சிங் என்ற அந்தத் தலைமை ஆசிரியை, கையில் பயங்கர ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்திற்குள் வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், “தனக்கு மிரட்டல் இருந்ததால், பாதுகாப்பிற்காகவே ஆயுதங்களைக் கொண்டு வந்தேன்” என அந்த ஆசிரியை வினோதமான விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், தனக்கு யார் மிரட்டல் விடுத்தார்கள் அல்லது என்ன மாதிரியான அச்சுறுத்தல் என்பது குறித்து எந்த ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை.
மேலும், பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பே அவர் சில பெற்றோர்களிடம் அந்த ஆயுதங்களைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் இந்த விபரீதமான செயலால், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
ஆசிரியை ஷிகா சிங் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கல்வித்துறை அவரைப் பணியிடை நீக்கம் செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், ஆசிரியையின் கணவர், அவர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
मिलिए लेडी द्रोणाचार्य से, यह धारदार हथियार लेकर स्कूल आती है, बच्चों को डराने धमकाने के लिए 🔥🔥
उत्तरप्रदेश के कौशाम्बी में सरकारी स्कूल की प्रधानाध्यापिका शिखा सिर्फ चाकू और चापड़ लेकर स्कूल आती है, बच्चों ने बताया कि वह हथियारों से हमें डराती है,
सरकार को इस महिला को तुरंत… pic.twitter.com/HTJZ6LT1na
— Ravi Parmar (@raviparmarIN) July 17, 2026
“>
பள்ளிகள் மாணவர்களுக்கான பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அதிகாரிகள், இத்தகைய விதிமீறல் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். தற்போது அந்த ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
