அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (மார்ச் 29) அக்கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பல முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தூசி மோகனுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கட்சியின் இந்த முடிவால் ஆத்திரமடைந்த அவர், அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து விலகிய தூசி மோகன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குச் செய்யாறு தொகுதியில் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் ஒன்றான செய்யாறில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரே மாற்றுக்கட்சியில் இணைந்து போட்டியிட உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்வரும் தேர்தலில் அதிமுகவிற்குச் சவாலாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.