கேஸ் அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2 அடி உயரத்திலும் சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டும். மாற்று சிலிண்டர் இணைக்கும் போது பூஜை விளக்குகள் மற்றும் ஊதுபத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவன குறைவாக இருக்கக் கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வலியும் பால் போன்ற பொருள்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவால் வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படலாம். எனவே சிலிண்டர் பயன்படுத்துவோர் இதையெல்லாம் கவனிங்க.