இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் உர்பி ஜாவித். இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். எப்போதும் வித்தியாசமான மற்றும் ஆடைகளை அணியும் உர்பிக்கு சமூகவலைதளங்களில் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது உதடு வீங்கிக் காணப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவில், உதடுகள் சிறியதாக இருந்ததால், 18 வயதிலிருந்தே லிப் ஃபில்லர் அறுவை சிகிச்சை செய்து வருகிறேன் என்றும், குறைந்த செலவில் செய்து தருவதாக ஒரு மருத்துவர் கூறியதாகவும், கடைசியில் இப்படி ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.