தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜெ. சூர்யா. அதன்பிறகு குஷி, நியூ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் .இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது பண வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடிப்பதற்காக எஸ் ஜே சூர்யா ஏழு கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஜிகர்தண்டா2, தனுஷின் D50போன்ற படங்களுக்கும் தலா 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அந்த வகையில் எஸ்ஜெ சூர்யாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 150 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்களோ இவருக்கு இவ்வளவு சொத்து இருக்குதா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.