டெல்லி காவல்துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் ரவிக்குமார். 2010 காவல்துறையில் சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 28ஆம் தேதி ரவிக்குமார் பார்ட்டி ஒன்றில் சக நண்பர்களுடன் பங்கேற்றார்.

அந்த பாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டாடிக் கொண்டிருந்தார். ஆனால் அதுதான் அவரது கடைசி நடனம் என்பது பின்னர் தான் தெரிந்தது. மகிழ்ச்சியுடன் நடனமாடி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று கூறி மயங்கி விழுந்தார்.

அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 45 நாட்களுக்கு முன்பு தான் ரவிக்குமாருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது அவர் மகிழ்ச்சியாக நடனமாடிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.