தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மதிமுக மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அர்ஜுன ராஜ் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், “தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு; இதனை நினைத்து நாங்கள் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருக்கிறோம்” என்று மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வேளையில், தங்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், வரும் காலங்களில் மக்கள் செல்வாக்கை நிரூபிப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், மதிமுக -வின் இந்த ‘சிரிப்பு கலந்த அழுகை’ கூட்டணிக்குள் விரிசல் விழுந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
