சிம்மராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக முயற்சி திருவினையாக்கும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும். மகிழ்ச்சியுடன் செயல்பட்டு முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். செல்வாக்கு மிக்க நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வாய்ப்புகள் அற்புதமாக இருக்கிறது.

குடும்பத்தில் உள்ளவர்கள் ஏதாவது குறை கூறுவார்கள். யார் என்ன சொன்னாலும் ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு விடுவது நல்லது. அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று பெண்கள் பணிகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இன்று மாணவர்களுக்கு யோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்