கன்னி ராசி அன்பர்களே,

இன்று நடக்கும் பொது மாற்றத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகளை கடைசி நேரத்தில் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். கடன் விவகாரங்களை அற்புதமாக கையாளுவீர்கள். திட்டம் தீட்டி பணிகளை முடித்து வெற்றி பெற முடியும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். பதற்றம் பரபரப்பு வேண்டாம். அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள செயல்படுங்கள்.

யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். இந்த நாள் கனவுகள் மேம்படும் நாள் என்று சொல்லலாம். முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி ஆதரவு கிடைக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருமண பேச்சுகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெண்களுக்கு இன்று எந்த ஒரு பிரச்சனையிலும் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் என்று சொல்லலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். லட்சிய நோக்கத்துடன் கல்வி அமைத்துக் கொள்வீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு

அதிஷ்ட நேரம்: ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறம்