தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடிப்பில் கடந்த 2012 வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி வைத்து நானும் ரெளடி தான் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன்பின் கடந்த 2022 -ம் வருடம் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விக்னேஷ் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி போல் இருக்கும் என கூறப்படுகிறது.