கேஜிஎப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக “சலார்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் “பாகுபலி” திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் “சலார்” படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். வரும் செப்டம்பர் 28ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் படக்குழுவினருக்கு தலா ரூ.10,000 அன்பளிப்பாக கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.