ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பன்சூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

வெளியான வீடியோவில், கருப்பு நிற தார் எஸ்யூவி, அதில் பயணம் செய்தவர்கள் அறியப்பட்ட மூன்று பேர் சென்ற பைக்கை பின்புறத்திலிருந்து மோதியதாகத் தெரிகிறது. மோதலில் இருந்து மீண்ட பைக் ஓட்டுநர்களில் ஒருவர், திடீரென தார் காரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதே நேரத்தில், வெள்ளை நிற ஸ்விஃப்ட் கார் ஒன்று பின்னால் இருந்து வந்து நின்றது. தகவல்களின்படி இரண்டு குழுக்களுக்கும் பழைய விரோதம் இருந்தது.

தற்கு பதிலடி அளிக்கும் வகையில், காரிலிருந்தவர்களும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி சுட்டுக் கொண்டிருப்பது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. திடீர் துப்பாக்கிச் சூட்டால் இரண்டு கார்களும் அங்கு நின்று விட, பைக்கில் பயணித்த மூவர் உயிரைக் காப்பாற்ற ஓடி வெவ்வேறு வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவ தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.