பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் இருக்கும் நிலையில் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில் பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறை கைதியான சந்தன் மிஸ்ரா என்பவர் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை துப்பாக்கி ஏந்திய 5 பேர் கொண்ட கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்து ஐசியூ கதவை திறந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சந்தன் மிஸ்ராவை சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சந்தன் மிஸ்ரா மீது ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர் மீது முன்விரோதமாக இருந்த கும்பல் தான் வரை சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறிய நிலையில் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த மாநிலத்தில் கடந்த சில வாரங்களில் தொழிலதிபர், பாஜக மூத்த வழக்கறிஞர் என அடுத்தடுத்து சிலர் கொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.