மின்னல் வேகத்தில் பைக் ஓட்டி 2K கிட்ஸ்களின் மனதில் ஹீரோவாக வீற்றிருப்பவர் TTF வாசன். சினிமா ஹீரோக்களைவிட அதிகமாக இவருக்கு சமூக வலைத்தளத்தில் (மில்லியன் கணக்கில்) பின்தொடர்பவர்கள் உள்ளனர்.  வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையை விட்டு ஓட்டுவது, விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுவது என தொடர்ந்து இவர் மீது பல புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். வரும் 29ஆம் தேதி, டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  இந்த செய்தி 2K கிட்ஸ்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது