சமூக வலைதளங்களில் தற்போது ஒரு புதிய வகை காணொளி வைரலாகி வருகிறது. இந்தக் காணொளிகளில், காட்டு விலங்குகள் வீட்டில் உள்ளவர்களையோ அல்லது குழந்தைகளையோ தாக்க வருவது போலவும், அதை பூனைக்குட்டிகள் துணிச்சலாக தடுத்து விரட்டுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த வீடியோக்கள் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. இவை மிகவும் சுவாரஸ்யமாகவும், பார்ப்பவர்களை கவரும் வகையிலும் இருப்பதால், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Sad Cat TV (@sadcattv)

இந்தக் காணொளிகளில் பூனைக்குட்டிகளின் தைரியமான செயல்களும், காட்டு விலங்குகளை எதிர்கொள்ளும் கற்பனையான காட்சிகளும் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இவை, உண்மையான நிகழ்வுகள் இல்லையென்றாலும், பார்க்கும் போது மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும் தருகின்றன. இதுபோன்ற புதுமையான காணொளிகள் சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து, பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.