சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விலங்குகளில் காட்டு வீடியோக்கள் மற்றும் பறவைகள் செல்ல பிராணிகள் என அனைத்து உயிரினங்களின் பாச வீடியோக்கள் மற்றும் மோதல் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சிங்கத்துக்கும் புலிக்கும் இடையேயான மோதலை காண முடிகிறது. முதலில் ஒரு காட்டுப் பகுதியில் சிங்கம் மற்றும் புலி இயல்பாக நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் சில நொடிகளில் இரண்டும் அருகில் வந்து ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்கிறது. அதைச் சுற்றி உள்ள விலங்குகள் அதனை இயல்பாக பார்த்துக் கொண்டிருந்தாலும் அதனை பார்க்கும் போது அச்சுறுத்தலாக தான் உள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Animal safari இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@animals_safaris)