தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குப்பதிவு குறித்த மிக முக்கியமான தகவலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமலாக்கத்துறை (ED) கொடுத்த மிக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான், லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது கே.என்.நேரு மீது இந்த லஞ்ச ஒழிப்பு வழக்கைப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
