நிழலில் இருந்தே நிஜத்தை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி சிறுவனை, அவனது பராமரிப்பாளரே மிகவும் கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பாதுகாப்பான கைகளில் இருப்பதாக நம்பப்பட்ட அந்தச் சிறுவனை, ஒரு பேயைப் போல மாறி அந்த நபர் இரக்கமின்றி அடிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களின் இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, “இதை பார்ப்பதற்கே மிகவும் கடினமாக இருக்கிறது” என்று நெட்டிசன்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“>

இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து பொதுமக்கள் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆதரவற்ற நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் இவ்வளவு வன்முறையை காட்டுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுக்க முறையான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் அவசியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தற்போது பலரின் குரலாக ஒலிக்கிறது.