ஹைதராபாத்தில் நடந்த ஒரு சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.கே. ஜிலானி என்பவர் தனது மகன் ஃபைசலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் மகன் ஃபைசல் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து ஜிலானி கார் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது காரை நிறுத்த முயன்ற ஜிலானி அதன் முன்பக்கத்தில் விழுந்தும், ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அவரை இழுத்துச் சென்றார். சில தூரம் ஜிலானி காரின் முன்பக்கத்தைப் பிடித்துத் தொங்கியபடி சென்ற காட்சி பார்ப்போரை உறைய வைத்தது. இறுதியில் அங்கிருந்த பொதுமக்கள் காரை வழிமறித்து நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
<a href=”http://

“>

ஆனால், அந்தச் சூழலைப் பயன்படுத்தி கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ஃபைசல் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், விபத்துக்குக் காரணமான நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.