சாலை விபத்தில் தெலங்கானா பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்தார். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது.

தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.