மக்கள் தொகை அதிகரித்து வரும் காரணத்தினாலும், பொருளாதாரத்தின் காரணமாகவும் ஆங்காங்கே வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்படும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார சட்டப்படி புதிய மின் இணைப்பை விரைவாக வழங்குவதற்கு 150 கிலோ வாட்  வரையிலான சுமைகளுக்கு டிமாண்ட் கட்டணங்கள் கணக்கிடப்படுவது கிடையாது. புதிய மின் இணைப்பு வழங்கவும் தற்போதுள்ள இணைப்பை மாற்றவும் மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் ஏழு நாட்கள் ஆகும்.

நகராட்சி பகுதிகளில் 15 நாட்களும், பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் 30 நாட்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும். இந்த சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. தற்போது அதை மாற்றி சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத். பெங்களூர், கொச்சி, புனே போன்ற நாட்டின் பல்வேறு நகரங்களில் மூன்று நாட்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.