ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் ஆலூரை சேர்ந்த முன்னாள் BJP MLA நீரஜா ரெட்டி சாலை விபத்தில் காலமானார். ஹைதராபாத்தில் இருந்து கர்னூலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தது வருகின்றனர்.