சிங்கப்பூர் தஞ்சோங் காத்தோங்கில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கார் சாலையில் சென்றதும் எதிர்பாராதவிதமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பையா அவரது குழுவினர் காரில் இருந்த பெண் ஓட்டுனர் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு காரில் இருந்தவர்களை மீட்ட மீட்பு குழுவினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
— PttvOnlinenews (@PttvNewsX) July 28, 2025
