உத்தரபிரதேசத்தில் இருந்து வெளிவந்த ஒரு விசித்திரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியை முகத்தால் தேய்த்து பல முறை முத்தமிடுவதை காணலாம்.

குறுகிய அந்தக் கிளிப் முதலில் X – தளத்தில் பகிரப்பட்டு, பின்னர் இன்ஸ்டாகிராமிலும் பரவியது. சில நொடிகளில் இணையத்தில் பரவிய இந்தக் காட்சி பலரையும் ஆச்சரியத்திலும், சிலரைக் கேலியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களின் எதிர்வினைகள் கலவையாக இருந்து வருகிறது . சிலர் “இதுவும் என்ன குருட்டு விசுவாசம்?” என்று கேள்வி எழுப்பினர், மற்றவர்கள் “முழுக்க ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகம் போல உள்ளது” என சந்தேகித்தனர்.

சிலர் சிரித்து ரசித்தும், சிலர் அந்த நபரை ட்ரோல் செய்தும் கருத்துகள் தெரிவித்தனர். “உபியில் ஏழைகளின் நம்பிக்கை அகிலேஷ் யாதவ் தான்” எனப் பாராட்டும் கருத்துகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

“>

 

இந்நேரத்தில், அகிலேஷ் யாதவ் அரசியல் கருத்துக்களாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸை புகழ்ந்து பேசியதை அவர் கடுமையாக விமர்சித்து, “ஆர்எஸ்எஸ் வார்த்தைகளால் சுதேசி, ஆனால் மனதளவில் அந்நியன்” என குற்றம் சாட்டினார்.

மேலும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களே நாட்டின் வலிமை என வலியுறுத்திய அவர், யோகி ஆதித்யநாத் பாஜகவில் அதிகாரத்திற்காக மட்டுமே சேர்ந்தார் என்றும் கடுமையாக சாடியுள்ளார். இவ்வாறான சூழலில், வைரலாகிய இந்தக் கொடி சம்பவம் உபி அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.