தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் தங்கள் காரை பேக்கரிக்கு  வெளியே நிறுத்தியபோது, தவறுதலாக சாவி உள்ளே இருந்த நிலையிலேயே கதவுகள் பூட்டப்பட்டன.

மேலும் அதிர்ச்சியான விஷயம் என்வென்றால் , அந்தக் குடும்பத்தின் சிறிய மகள் காருக்குள் சிக்கிக் கொண்டதுதான்,  பெற்றோரும் அங்கு இருந்தவர்களும் திகிலடைந்தனர். கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்றும் பலனின்றி குழந்தை சிக்கிக்கொண்டதால் மேலும்  பதற்றத்தை அதிகரித்தது.

அந்த நேரத்தில், அங்கு இருந்த ஒரு இளைஞர் ஒரு வித்தியாசமான யோசனையை முன்வைத்தார். தனது மொபைல் போனில், காருக்குள் இருந்து கதவை எவ்வாறு திறப்பது என்பதை விளக்கும் ஒரு வீடியோவைத் தேடி, காருக்குள் இருந்த சிறுமிக்கு காட்டினார். அந்தக் குழந்தையும் அந்த வீடியோவில் சொல்லப்பட்ட படிகளை கவனமாக பின்பற்றி, உள்ளே இருந்தபடியே பூட்டை திறக்க முயன்றாள். இறுதியில், கதவு திறக்கப்பட்டதும் குழந்தை பாதுகாப்பாக வெளியே வந்தது.

“>

 

குழந்தை காயமின்றி வெளியே வந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் பெருமூச்சிவிட்டனர். அதேசமயம், சரியான நேரத்தில் தன்னுடைய புத்திசாலித்தனத்தையும் மன உறுதியையும் காட்டிய அந்த இளைஞருக்கு உள்ளூர்வாசிகள் பாராட்டு தெரிவித்தனர். “அவரது விரைவான முடிவு ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தது” என மக்கள் கருத்து தெரிவித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.