உத்தரப் பிரதேசம், மீரட்டில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனி டோல் பிளாசாவில், டோல் வரி தொடர்பான தகராறு காரணமாக, இந்திய இராணுவ சிப்பாயை டோல் பிளாசா பணியாளர்கள் தூணில் கட்டி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகஸ்ட் 17, ஞாயிறு இரவு சுமார் 8 மணியளவில், சரூர் பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், எட்டு முதல் பத்து பேர் வரை டோல் பிளாசா பணியாளர்கள் அந்த சிப்பாயை சுற்றி நின்று கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிப்பாயை கயிற்றால் தூணில் கட்டியபடி அடிக்கும் காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு, பொதுமக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.
#मेरठ के कपिल कश्मीर में तैनात भारतीय सेना के जवान है
छुट्टी खत्म होने पर ज्वाइनिंग के लिए घर से निकले और टोलप्लाजा पर जाम में फंस गए
टोल पर जल्द निकलने की रिक्वेस्ट की तो उनके साथ गुंडागर्दी हुई. टोलप्लाजा के गुंडों ने उन्हें लात घूंसा, लाठी से तालिबानी अंदाज में पीटा है pic.twitter.com/kINHa9HHDY
— Narendra Pratap (@hindipatrakar) August 17, 2025
“>
இதே சமயம், மீரட் போலீசார் விரைவாகச் செயல்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை சுயநலமின்றி காக்கும் இராணுவத்தினர் மீதான பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அத்துடன் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
