குஜராத்தில் நாய் கடித்த நபர் ஒருவர், நாயைப் போலவே சாலையில் ஊர்ந்து சென்றும், குரைத்தும் விசித்திரமாக நடந்து கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட அந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் வெறிநாய் கடியின் தாக்கம் தீவிரமடையும் போது, அது மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து இத்தகைய வினோதமான மற்றும் கட்டுப்பாடற்ற நடத்தைகளை உருவாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மருத்துவர்கள், நாய் கடித்தவுடன் முறையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
પાલનપુરમાં હડકવાનો કહેર! કૂતરું કરડ્યા બાદ જુઓ યુવકની કેવી થઇ હાલત!#Rabies #Palanpur #Gujarat #GujaratiNews #GujaratSamachar pic.twitter.com/VgrMLRnVzJ
— Gujarat Samachar (@gujratsamachar) January 31, 2026
“>
இந்நிலையில் வைரஸ் மூளையைப் பாதிக்கும் போது, நோயாளிகள் தண்ணீரைப் பார்த்தால் பயப்படுதல் மற்றும் விலங்குகளைப் போலவே சத்தமிடுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் என்று கூறினர். இந்த நிலையைத் தவிர்க்க, தெரு நாய்கள் கடித்தால் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவ உதவியை நாடி உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
