சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சீறிப்பாயும் ஆற்று வெள்ளத்தைக் கடக்க முயலும் ஒரு யானைக் கூட்டத்தைக் காணலாம். துரதிர்ஷ்டவசமாக, கூட்டத்திலிருந்த ஒரு சிறிய குட்டி யானை நீரோட்டத்தின் வேகத்தைத் தாங்க முடியாமல் நிலைதடுமாறி ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்படுகிறது.

மேலும் மரண பயத்தில் தத்தளிக்கும் அந்தக் குட்டியைக் காப்பாற்ற மற்ற யானைகள் திகைத்து நிற்க, ஒரு தாயின் இதயம் மட்டும் துடிதுடிக்கிறது. ஒரு நொடி கூட தாமதிக்காமல், அந்தத் தாய் யானை தண்ணீருக்குள் பாய்ந்து தன் குட்டியை நோக்கிச் செல்லும் காட்சி பார்ப்பவர்களை உறைந்து போகச் செய்கிறது.

“>

இந்நிலையில் வெள்ளத்தின் விசை அதிகமாக இருந்தபோதிலும், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் அந்தத் தாய் யானை போராடுகிறது. தன் துதிக்கையாலும் உடலாலும் குட்டி யானைக்கு ஒரு தடுப்புச் சுவர் போல முட்டுக்கொடுத்து, மெல்ல மெல்ல பாதுகாப்பான இடத்திற்கு தள்ளிச் செல்கிறது.

இந்த இறுதியில், தன் குட்டியை பத்திரமாக கரை சேர்த்த பின்னரே அந்தத் தாய் நிம்மதி அடைகிறது. “தாய்க்கு நிகர் வேறெதுவுமில்லை” என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இயற்கையின் இந்த உணர்ச்சிகரமான காட்சி இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.