மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி
எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், அத்துறையை ஊக்குவிக்கவும் ரூ. 40,000 கோடி பிரம்மாண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயோ-மெடிக்கல் (Bio-Medical) திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மாநில அரசுகளுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும். கைத்தறி மற்றும் பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் 200 பிரத்யேகப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய மண்டங்களில் ரூ.5000 கோடி முதலீட்டில் என்ன கற்பூரம் மற்றும் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
கண்டெய்னர்கள் துறையை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு
புதிய தேசிய நீர் வழித்தடங்கள் அமைக்க ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிலையில் மோட்டார் வாகன விபத்துகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகைகளில் இனி வருமான வரியிலிருந்து முழு விலக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து வரி குறைக்கப்படும்
வருமான வரி தாக்கல் செய்யும்போது இனி பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதன்படி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மறைத்தால் 100% அபராதம்.
வெளிநாடு சுற்றுலாவுக்கு வரி பிடித்தல் இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதிக்கு பதிலாக இனி மார்ச் மாதம் இறுதி வரை நீடிக்கப்படும்.
தனிநபர் வருமான வரிகள் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் கிடையாது.
புற்று நோய்க்கான 12 உயிர்க்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரிவிலக்கு
