சோசியல் மீடியாவில் தினமும் ஏகப்பட்ட வீடியோக்கள் வந்தாலும், சின்னப் பிள்ளைகள் செய்யும் லூட்டிகளும் அவர்களின் அப்பாவித்தனமான பேச்சும் எப்போதுமே தனி அழகுதான். அந்த வகையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பள்ளிச் சிறுவனின் வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி வருகிறது. பள்ளிச் சீருடை அணிந்த அந்தச் சிறுவன், தன் ஆசிரியரின் மொபைல் கேமரா முன்னாடி நின்று மிகவும் தைரியமாகவும் ஜாலியாகவும் பேசி அசத்துகிறான்.

ஆரம்பத்தில் இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொள்வது போலத் தெரிந்தாலும், அடுத்த சில வினாடிகளில் அந்தச் சிறுவன் சொன்ன ஒரு விஷயம் அங்கிருந்த அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.அந்த உரையாடலின் போது, சிறுவன் தன் ஆசிரியரைப் பார்த்து, “சார், நீங்க பார்க்க நல்லா பாடிபில்டர் மாதிரி கச்சிதமா இருக்கீங்க, ஆனா உங்க வொய்ஃப் ரொம்ப குண்டா இருக்காங்களே” என்று டக்குனு சொல்ல, ஆசிரியர் ஒரு நிமிடம் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.

<a href="http://

“>

இருந்தாலும் அவர் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே, “ஓ, நீ சொல்வது சரிதான்” என்று கூலாகப் பதில் சொல்ல, அந்தப் பையனோ விடாமல், “ஆனா எனக்கு இது பிடிக்கல” என்று அடுத்த கவுண்டரைக் கொடுத்து அதிர வைத்துள்ளான். இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பதுடன், குழந்தையின் பேச்சை சீரியஸாக எடுக்காமல் சிரிப்புடன் கையாண்ட அந்த ஆசிரியரின் பக்குவத்தையும் பாராட்டி வருகிறார்கள்.