சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும் பார்வைகளுக்காகவும் மக்கள் செய்யும் விசித்திரமான சாகச வீடியோக்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த வகையில் இப்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி வருகிறது. ஒட்டகத்தின் அருகே நின்று கொண்டிருக்கும் அந்தச் சிறுவன், எல்லோரையும் திகைக்க வைக்க வேண்டும் என்ற அதீத தன்னம்பிக்கையில் ஒட்டகத்தைச் சீண்டி, அதன் கால்களுக்கு அடியிலிருந்து நழுவி வெளியேற முயற்சி செய்கிறான்.

ஆனால், அந்த ஒட்டகத்திற்கு இந்தச் செயல் கொஞ்சமும் பிடிக்காததால், சிறுவன் அடியிலிருந்து வெளியே வந்த அடுத்த கணமே தனது பின்னங்காலால் அவனைப் பலமாக உதைத்து விடுகிறது. அந்த உதை சிறுவனை நிலைதடுமாறச் செய்ய, சில வினாடிகளுக்கு முன்பு வரை வீரம் காட்டியவன் டக்குனு தன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு விசித்திரமான முகபாவனைகளைச் செய்யத் தொடங்குகிறான்.

<a href="http://

“>

முதலில் பயந்த அங்கிருந்தவர்கள், அவனுக்குப் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்ததும் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினர். தற்போது இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, “தேவையில்லாத வேலை” என செம்மையாகக் கேலி செய்து வருகின்றனர்.