தெலுங்கானா மாநிலம் ரெட்டிபுரம் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் கக்கட்டியா யுனிவர்சிட்டி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காவலர் ஒருவர் நீரில் மிதந்தவரை சடலம் என்று நினைத்து ஒரு கையைப் பிடித்து இழுத்தார்.

அப்போது அந்த நபர் சட்டென்று விழித்து திரும்பி பார்த்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குளிர்ந்த சூழலுக்காக ஏரிக்குள் இறங்கி கரையோரமாக படுத்ததாகவும், போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகவும், தன்னை இறந்ததாக மக்கள் கருதியதால் தூக்கம் பறிபோனதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.