சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் கண்களைக் கலங்கச் செய்துள்ளது. டெலிவரி பாய் ஒருவர் எதிர்பாராத விதமாக ஒரு பிஎம்டபிள்யூ (BMW) சொகுசு காரின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்தக் காரைச் சரி செய்ய சுமார் ₹1.5 லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், காரின் உரிமையாளர் அந்த இளைஞனிடம் “உன்னால் எவ்வளவு தர முடியும்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞன் கண்ணீர் மல்க, தன்னிடம் வெறும் 3000 முதல் 4000 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.
> A delivery boy accidentally scratched a man’s BMW.
> The owner said repairs would cost 1.5 lakh and asked how much the boy could pay.
> The boy cried and said he only had 3–4 thousand. His mother has last-stage cancer. He showed medical reports.
> The owner decided to pay for… pic.twitter.com/VMdRmKbGny— ︎ ︎venom (@venom1s) January 23, 2026
அதுமட்டுமல்லாமல், தனது தாய்க்கு இறுதிக்கட்டப் புற்றுநோய் (Stage-4 Cancer) இருப்பதைக் கூறி, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் காட்டியுள்ளார். அந்த இளைஞனின் வறுமையையும், தாயின் உடல்நிலையையும் உணர்ந்த கார் உரிமையாளர், அந்த விபத்துக்காக எந்தப் பணமும் வாங்காமல், தனது காரைச் சொந்தச் செலவிலேயே சரி செய்து கொள்வதாக அறிவித்தார். மேலும், அங்கிருந்த மக்களிடம் இந்த இளைஞனின் தாயின் மருத்துவச் செலவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். மனிதாபிமானம் மறைந்து வரும் இந்தக் காலத்தில், ஒரு வசதி படைத்த மனிதர் காட்டிய இந்தப் பெருந்தன்மை பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
