செப்டோ நிறுவன டெலிவரி ஊழியர் ஒருவர் நள்ளிரவில் மக்கள் ஆர்டர் செய்யும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நகைச்சுவையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

@the_deliveryboy81 என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், “நள்ளிரவில் வரும் பெரும்பாலான ஆர்டர்கள் பெண்களுடையதாகவே இருக்கின்றன; அவர்கள் ஆர்டர் எடுத்தவுடன், ‘அண்ணா, வந்ததும் போன் செய்யுங்க, காலிங் பெல்லை அடிச்சிடாதீங்க’ என்று ரகசியமாக மாட்டிவிடாமல் இருக்கக் கூறுவார்கள்” என்று சிரித்தபடி பேசியுள்ளார்.

மேலும், அந்த நேரத்தில் சிப்ஸ், வேஃபர்ஸ் போன்ற குழந்தைத் தனமான நொறுக்குத் தீனிகளை ஏன் நள்ளிரவில் திருட்டுத்தனமாகச் சாப்பிடுகிறார்கள் என்றும், பகல் முழுக்க இவர்களுக்குச் சாப்பிட நேரமே கிடைக்காதா என்றும் அவர் செல்லமாகக் கடிந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பலதரப்பட்ட சுவாரசியமான கமெண்டுகளையும் குவித்து வருகிறது. “அண்ணா, எங்களை திட்டாதீங்க” என்றும், “எங்களது இந்த நள்ளிரவு ரகசியத்தை எல்லோருக்கும் வெளிப்படுத்தியதற்கு நன்றி” என்றும் நெட்டிசன்கள் விளையாட்டாகப் பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர், “நள்ளிரவில் மேகி சாப்பிட்டுக் கொண்டே இந்த வீடியோவைப் பார்க்கிறேன்” என்றும், “நள்ளிரவில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதுதான் எங்களது தனிப்பட்ட நிம்மதியான நேரம்” என்றும் தங்களது நள்ளிரவுப் பழக்கங்களை ஓப்பனாக ஒப்புக்கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mohammed Taufique Ansari (@the_deliveryboy81)

“>

டெலிவரி பையனின் இந்த எதார்த்தமான பேச்சு பலருக்கும் தங்களது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதால் இந்த வீடியோ பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.