திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நிஜ மகேந்திரா ஸ்கார்பியோ கார் திரையைக் கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தியேட்டரில் மக்கள் அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது படத்தின் காட்சியில் ஒரு கார் வேகமாக ஸ்கிரீனை நோக்கி வருவது போல் காட்டப்படுகிறது. அது படத்தின் ஒரு பகுதிதான் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த அடுத்த நொடி, நிஜ கார் ஒன்று திரையைப் பிளந்து கொண்டு தியேட்டருக்குள் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவம் எங்கு, எந்த தியேட்டரில் நடந்தது என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த வினோதமான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதனை “நிஜ உலக 4D தியேட்டர் அனுபவம்” என்றும், “ரீல் அப்படியே ரியல் ஆகிவிட்டது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நிஜமாகவே நடந்ததா அல்லது ஏதேனும் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விளம்பரமா, அல்லது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
कमाल है सिनेमा हॉल में अचानक घुसी महिंद्रा स्कार्पियो यह देख कर चीख पुकार मच गई।
ऐसा तो पहले कभी नहीं देखा। pic.twitter.com/gmSjuTN03x
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) May 29, 2026
“>
எது எப்படியோ, படம் பார்த்துக் கொண்டிருந்த தியேட்டருக்குள் கார் புகுந்த இந்த த்ரில்லான வீடியோ தற்போது இணையவாசிகளிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி ட்ரெண்டாகி வருகிறது.
