தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான கூட்டணி குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன.
இந்நிலையில், கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடும் வகையில், “சுயநலமும், கர்வமும் இருக்கும் இடத்தில் அதன் சாம்ராஜ்ஜியம் அழியும்” எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், தவெக – அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்களை முற்றிலுமாக மறுத்த அவர், அதிமுகவுடன் கூட்டணி என்பது தற்போதைய சூழலில் அவசியமற்றது என்றும், விஜய் தலைமையிலான தவெக தனித்து போட்டியிட்டு 180 முதல் 200 தொகுதிகள் வரை வென்று மாபெரும் சாதனை படைக்கும் என அதிரடி நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய இந்தக் கருத்துக்கள், அதிமுக கூடாரத்திற்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
