அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே வெள்ளை மாளிகையில் நடந்த மின்சார வாகன மாநாட்டில் எலான் மஸ்க் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த அவர் அதிபர் தேர்தலில் பைடனுக்கு வாக்களிப்பதை நினைத்துப் பார்க்க முடியாது எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பொது அறிவு உடைய சாதாரண மனிதர் அமெரிக்க அதிபராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார்.