இன்றைய காலக்கட்டத்தில் ‘பேஷன்’ என்ற பெயரில் எதை விற்றாலும் வாங்குவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. ஒரு பிரபலமான மால் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், கடையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொம்மைக்கு (Mannequin) சாக்குப்பையினால் செய்யப்பட்ட ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணச் சாக்குப்பையை வெட்டி, அதில் பூ வேலைப்பாடுகள் செய்து, மிக நேர்த்தியான கட் மற்றும் ஷேப் கொடுத்து ஒரு பிராண்டட் உடை போலவே மாற்றியுள்ளனர். ஆனால், அதன் விலைதான் பலரையும் தலைசுற்ற வைத்துள்ளது. சாதாரணமாக ₹20 அல்லது ₹30-க்கு கிடைக்கக்கூடிய அந்தச் சாக்குப்பை, இப்போது டிசைனர் டிரஸ் என்ற பெயரில் ₹3000-க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ऐसी ड्रेस की बोरी में तो हमारे यहां गेहूं भरकर रखते है ।
और ये ड्रेस यहां 3000 में मिल रही है अरे कोई हमसे 200 में ही ले लो 😂😜 pic.twitter.com/mxpTilHCn6
— Pushpraj sharma (@RealPushprajX) February 8, 2026
சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானதும் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? “எங்கள் வீட்டில் கோதுமை கொட்டி வைக்கும் சாக்குப்பை இது, யாருக்காவது 200 ரூபாய்க்கு வேணும்னா சொல்லுங்க” என்று ஒருவர் கிண்டல் செய்ய, இன்னொருவரோ “எங்கள் வீட்டில் 300 கடுகு மூட்டைகள் இருக்கின்றன, அதை விற்றால் நான் லட்சாதிபதி ஆகிவிடுவேன் போலயே!” எனப் பதிவிட்டுள்ளார். “இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ?” என்று ஒரு தரப்பினர் தலையில் அடித்துக்கொண்டாலும், பேஷன் உலகில் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கு எப்போதும் ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
