பள்ளிப் பருவம் முடிந்து விடைபெறும் ‘ஃபேர்வெல்’ (Farewell) நாளில், மாணவிகள் பலரும் விதவிதமான சேலைகளை அணிந்து வந்து அசத்துவது வழக்கம். அப்படி ஒரு பள்ளியில் மாணவிகள் வரிசையாகத் தங்களின் ஸ்டைலான என்ட்ரியைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, கடைசியாக வந்த ஒரு மாணவி செய்த செயல் அனைவரையும் வியப்பிலும், பின் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவி தனது தோழியைப் பின்னால் அமர வைத்துக்கொண்டு, கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு செம கெத்தாக ஸ்கூட்டியில் பள்ளி நுழைவாயிலுக்குள் நுழைகிறார். ஆனால், அந்த ‘ஸ்வேக்’ சில நொடிகள் கூட நீடிக்கவில்லை.
Wild Card Entry 😂 👍🛵 pic.twitter.com/83SJ1NyJvm
— MemeCreaker (@MemeCreaker) February 8, 2026
வகுப்புத் தோழிகள் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, எதிர்பாராத விதமாக அந்த மாணவியின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டி, அப்படியே சரிந்து தரையில் விழுந்தது. கெத்தாக நுழைந்த மாணவி, அடுத்த நொடியே வண்டியோடு கீழே விழுந்ததைக் கண்டதும் அங்கிருந்த மொத்த மாணவிகளும் சிரிப்பலைகளில் மூழ்கினர். இந்த வேடிக்கையான வீடியோ ‘MemeCreaker’ என்ற எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “ஸ்கூல் இந்தச் சம்பவத்தை வருஷ கணக்குல மறக்காது” என்றும், “அந்தத் தங்கை செய்த என்ட்ரி உலக மகா காமெடி” என்றும் நெட்டிசன்கள் அந்த மாணவியைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
