பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் நீடித்து வந்த குடும்ப நிகழ்வுகளுக்கு பின்னர், கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட கவிதா, தற்போது கட்சியை முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் மகளான கவிதா, சமீபமாக கட்சியின் உள்நிலை நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், தொந்தரவு ஏற்படும்படி செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சி சார்பில் நடவடிக்கை எடுத்து, கவிதாவை சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை நேரடியாக அவரது தந்தை சந்திரசேகர ராவ் பிறப்பித்தார்.

இந்நிலையில், கட்சியின் இடைநீக்கம் நடவடிக்கைக்கு எதிர்வினையாக, கவிதா பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னை மற்றும் தந்தை, சகோதரரான கே.டி. ராமாராவை சூழ்ச்சிகரமாகச் சிக்கவைக்க சில உறவினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில், அவரது சகோதரர் கே.டி.ராமாராவை நேரடியாக எச்சரித்ததாகவும், ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கவிதா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஹரிஷ் ராவ், சந்திரசேகர ராவும், கே.டி. ராமாராவும் தோற்கடிக்க நிதி வழங்கியதாகவும் அவர் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வுகள், தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.