‘புலி’ படத்திற்காக வாங்கிய ஊதியத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் விஜய் மீது எழுந்த புகாரை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. இது விஜய்யின் நிதி கையாடல் மற்றும் முறைகேட்டையே காட்டுகிறது என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு பக்கம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகப் பேசினாலும், சட்ட ரீதியான இந்தத் தீர்ப்பு விஜய்க்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

​இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், “யாராக இருந்தாலும் சம்பாதித்தால் அதற்குரிய வரியைச் சரியாகச் செலுத்தித்தான் ஆக வேண்டும்” என்று கறாராகக் கூறியுள்ளார். மேலும், விஜய் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டதால், இது போன்ற விமர்சனங்களையும் புகார்களையும் அவர் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.