தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், ஆளுங்கட்சியான திமுகவின் ‘அசைக்க முடியாத தூண்கள்’ எனக் கருதப்பட்ட முக்கியத் தலைவர்கள் தவெக-வின் புதிய அலைக்கு முன்பாகச் சரிந்து விழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேரிடியாய் இறங்கியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் கோலோச்சிய அமைச்சர் கீதா ஜீவன், தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்திடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார். அதேபோல், தென் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க ஆளுமையான சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் தொகுதியில் தவெக-வின் சதீஷ் கிறிஸ்டோபரிடம் வீழ்ந்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட அறிவுசார் முகமான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR), தவெக வேட்பாளர் முஸ்தபாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது திமுக தொண்டர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

ஏப்ரல் 23-ல் பதிவான 85.1% வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகளாக மாறியுள்ளதை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. நடிகர் சுந்தர் சி அதிமுக கூட்டணி சார்பில் களமிறங்கியதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுரை மத்தியில், இறுதியில் தவெக-வின் கையே ஓங்கியுள்ளது.

 திராவிடக் கட்சிகளின் நீண்ட கால ஆதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட பலமான சவாலாகவே பார்க்கப்படுகிறது.