ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் சந்திரயான் -3 விண்கலம் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலம், ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, வெற்றிகரமாக மாற்றுவதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டுவுள்ளன. இதனை தொடர்ந்து நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான் -3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.