தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான 4000 கோடிக்கு மேல் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டதாக கூறும் நிலையில் பாஜக அண்ணாமலை 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். ஆனால் இதனை திமுக அரசு மறுத்த நிலையில் வெயிலில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் சம்பளத்தை தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு உடனடியாக அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு கல்விக்கான 2000 கோடி நிதியையும் விடுவிக்காமல் இருக்கிறது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்த தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஒன்றிய பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்களை தமிழ்நாடும், திமுகவும் முறியடித்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
