இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியது குறித்து இறுதியாக தனது மௌனத்தை கலைத்து விளக்கமளித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி தொடர்ந்து மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
மேலும் முதலில் அயர்லாந்து தொடரை 0-2 என இழந்த இந்திய அணி, தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று 0-2 என பின்தங்கியுள்ளது. கடந்த மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடாததால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
GAUTAM GAMBHIR TALKS ABOUT WHY SANJU SAMSON IS NOT IN THE 11 🗣️
– Hoping Sanju returns soon 🤞pic.twitter.com/NfHrhdn4EM
— Johns. (@CricCrazyJohns) July 8, 2026
“>
இதனால் சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்கியது குறித்துப் பேசிய கௌதம் கம்பீர், “நான் அவரிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே கூறிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இந்தத் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய பயிற்சியாளர் கம்பீர், வீரர்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி தங்களைச் சரியாக மாற்றிக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு அயர்லாந்தாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விளையாடாததே இந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்றும், நன்றாக விளையாடியிருந்தால் நாம் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்றிருக்க மாட்டோம் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரைத் தக்கவைக்க இந்திய அணி அடுத்த போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
