இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி, நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் நோக்கில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் தங்களது ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#WATCH | England: Teenage Cricket sensation Vaibhav Sooryavanshi met his fans, clicked selfies with them and signed autographs after Team India’s practice session at Trent Bridge, Nottingham today. India will face England tomorrow (7th July) in the third T20 match of the series. pic.twitter.com/kXN2uRdGd8
— ANI (@ANI) July 6, 2026
“>
அதன்படி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இந்த மூன்றாவது போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக அணியில் கூடுதல் பலம் சேர்க்க பிரின்ஸ் யாதவ், சூர்யான்ஷ் ஷெட்ஜ் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யாவன்ஷி இந்த போட்டியில் களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யாவன்ஷி ஆகியோர் களம் இறங்க வாய்ப்புள்ள நிலையில், இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகவும், ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் அணியை வழிநடத்த உள்ளனர்.
