​உலக கிரிக்கெட் ரசிகர்களால் ‘கேப்டன் கூல்’ என்று அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் மிக உருக்கமான மற்றும் எழுச்சியூட்டும் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று முதலமைச்சர் விஜய் தவெக பாணியில் மிகவும் நெகிழ்ச்சியோடு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

​மேலும் அந்தப் பதிவில், எம்.எஸ்.தோனியின் அமைதியான தலைமைத்துவமும், அவரது பணிவான குணமும் தலைமுறைகளைத் தொடர்ந்து பலரையும் ஊக்கப்படுத்தி வருகின்றன என்று பாராட்டியுள்ளார். “உங்களுக்கான விசில் சத்தங்கள் மேலும் மேலும் ஒலிக்கட்டும்; இன்னும் பல ஆண்டுகள் உங்களுக்கு பலப்பல வெற்றிகள் கிடைக்க மனதார வாழ்த்துகிறோம்” என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாழ்த்துப் பதிவு தற்போது தோனி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.