நியூயார்க்கில் வேலை தேடி வந்த சர்வதேச இந்திய மாணவியான திவ்யா பன்சால், சுமார் 420 நிராகரிப்புகளைச் சந்தித்த பிறகு இறுதியாக அங்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுள்ளார். இந்த நீண்ட மற்றும் சவாலான வேலை தேடல் பயணம் அவருக்குள் ஒரு பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொடர் தோல்விகளுக்குப் பிறகு தனக்குக் கிடைத்த இந்த வெற்றியைப் பகிர்ந்த அவர், “இனி என் வாழ்க்கை வேலையை மட்டுமே சுற்றியதாக இருக்காது” என்ற ஒரு முக்கியமான வாழ்க்கை பாடத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

“>

இதனால் வேலை தேடும் கடினமான காலகட்டத்தில், தன்னுடைய முழு அடையாளமும் சுயமதிப்பும் வெறும் வேலை வாய்ப்புகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக அவர் உணர்ந்துள்ளார். ஆனால், இந்த அனுபவத்திற்குப் பிறகு, வேலை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே தவிர, அதுவே முழு வாழ்க்கையும் அல்ல என்பதை அவர் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் திவ்யாவின் இந்த முதிர்ச்சியான பதிவு, தங்களின் கரியருக்காகக் கடுமையாகப் போராடி வரும் பல இளம் பட்டதாரிகளுக்கும், வேலை தேடும் மாணவர்களுக்கும் பெரும் உத்வேகத்தையும் ஆறுதலையும் அளித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.